100 சிறைவாசிகள் பிளஸ் – 2 தேர்வு எழுத உள்ளனர்

தமிழகம் முழுவதும் 100 சிறைவாசிகள் அவர்களுக்காக அமைக்கப்பட்ட புழல்-1 மையத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை சிறைவாசிகளும் எழுதி வருகின்றனர்.  

சிறைவாசிகளை பொறுத்தவரை படிக்க விரும்பும் அனைவருக்கும் அதற்கான வசதிகளை சிறைத்துறை செய்து தருகிறது. பட்டப்படிப்பு படிக்கும் சிறைவாசிகளுக்கு சிறைகளுக்கே சென்று பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கின்றனர். அதேபோல், மற்றவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.   இந்நிலையில், தமிழகம் முழுவதும் 100 சிறைவாசிகள் வருகிற 4ஆம் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக புழல்-1 சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறைவாசிகள் 3 பேர் சென்னை புழல் சிறையில் தேர்வு எழுதுகின்றனர்.   இதற்காக இவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தேர்வு முடியும் வரை அவர்கள் அங்கேயே தங்கி தேர்வை எதிர்கொள்கின்றனர். தேர்வு முடிவடைந்ததும் அவர்கள் மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைவாசிகள்தமிழகம்தேர்வுபிளஸ் 2புழல் -1
Comments (0)
Add Comment