ஈழத் திருநாட்டின் தமிழ் தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன்…

ஈழத் திருநாட்டின் தமிழ் தாய்
ஈன்றெடுத்த தவப்புதல்வன்.
‘தமிழன்’ யாரென்பதை அகிலமே
திரும்பிப் பார்க்க வைத்த
தனித் தமிழினத்தின் அடையாளம்.

மறைந்து வாழ்ந்த தமிழினத்தை
தன் மார்தட்டி ‘தமிழன்’ என
சொல்லவைத்த தனிப்பெருந்தலைவன்.

குறைந்த பேச்சு,நிறைந்த கேள்வி,
தனித்த சிந்தனை,நேர்கொண்ட பார்வை
என்ற தனிப்பெரும் பண்பாளன்.
ஆணும் பெண்ணும் சமம்
என எண்ணிய சமத்துவ நாயகன்.

தமிழ் பெண்கள் வாழ்வில் புரட்சிகர
மாற்றத்தை ஏற்படுத்தி புரட்சிகர
பெண்களை உருவாக்கிய
தனித்துவ தலைவன்.

தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து
தன்னலம் கருதாது எம்நலம் காத்த உலகத்தமிழினத்தின் உன்னத தலைவன்.

சாதியொழிப்பிற்கு முன்னுரிமையளித்து
மத சமத்துவத்தைப் பேணிய
முற்போக்காளன்.

இத்தனிப்பெருந்தலைவனின் அகவை நாளான இன்று உம்மை வாழ்த்தியும் போற்றியும் பெருமை கொள்கிறது உலகத் தமிழினம்.

தனு வட்டக்கச்சி..

தேசிய தலைவர்பிரபாகரன்வாழ்த்து
Comments (0)
Add Comment