சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட புல்மோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது..

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றார்கள் .

இந்நிலையில் இதனை உறுதி செய்யும் முகமாக நேற்றைய தினம்(10) புல்மோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு படகுகளில் நாயாறு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாகள்.

புல்மோட்டையைச் சேர்ந்த குறித்த 8  மீனவர்களும் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

குறித்த மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களையும் அவர்களது இரண்டு படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும்  முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் அவர்களுக்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெண்பகம்
Comments (0)
Add Comment