129 இந்திய மாணவர்களும் தெரிந்தே குற்றம் புரிந்தனர்- அமெரிக்கா வெளியுறவுத்துறை ..

விசா முறைகேடு தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள 129 இந்திய மாணவர்களும் தெரிந்தே குற்றம் புரிந்ததாக அமெரிக்கா  வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

மாணவர் என்ற அந்தஸ்துடன் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கி இருப்பதற்காக பர்மிங்டன் ((University of Farmington )) பல்கலைக்கழகத்தில் 600க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால்  குறித்த பல்கலைக்கழகமானது முறைகேடாகத் தங்கியுள்ளோரைப் பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட ரகசிய நடவடிக்கை என  பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதில் விண்ணப்பித்ததாக 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்ட நிலையில், போலியாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதுவுமே இல்லை என்பதை முன்னரே மாணவர்கள் அறிந்திருந்ததாகவும், தெரிந்தே தவறு செய்ததாகவும்  அமெரிக்கா  வெளியுறவுத்துறை   கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காஇந்திய மாணவர்கள்விசா முறைகேடுவெளியுறவுத்துறை
Comments (0)
Add Comment