100 கோடி ஆதார் எண்களை வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

அடுத்த ஆண்டுக்குள் 100 கோடி ஆதார் எண்களை வழங்குமாறு தேசிய அடையாள அட்டை ஆணையத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஐந்தாவது கட்டமாக ஆதார் அட்டை திட்டத்தைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி ஆதார் எண் என்ற இலக்கை எட்டுமாறு அடையாள அட்டை ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, என்.ஹெச்.பி.சி ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் அரசின் பங்குகளில் ஒரு பகுதியை விற்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், அரசுக்கு 43 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.

கோல் இந்தியாவில் 10 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் 23 ஆயிரம் கோடி ரூபாயும், ஓஎன்ஜிசியில் 5 சதவிகித பங்கு விற்பனை மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாயும் கிடைக்கும் எனத் தெரிகிறது. அதோடு, நலிவடைந்த 11 மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவையை வழங்க 288 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.

12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காபி உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு 950 கோடி ரூபாய் ஒதுக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

100 கோடிஅடுத்தஅடையாளஅட்டைஅரசுஆணையத்தைஆண்டுக்குள்ஆதார்எண்களைதேசியமத்தியவலியுறுத்தியுள்ளதுவழங்குமாறு
Comments (0)
Add Comment