நேற்று காலை ராமேஸ்வரம் மற்றும் மணட்பம் பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்களை மாலை 4 மணிவரை கச்சத்தீவு அருகே செல்ல விடாமல் அதி நவீன விரைவு ரோந்து படகில வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்ததுடன் படகிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தி கடலில் வீசி எறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்நது இன்று அதிகாலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ராமேஸ்வரத்தை சேர்ந்த எடிசன்,ஆரோக்கியம உள்ளிட்ட 14 மீனவர்களையும் மூன்று படகுகளையும் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்த பிறகு அவர்களைக் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்த மீனவர்கள் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.