கல்கடஸ் ரக துப்பாக்கி 4, ஷொட் கன் ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிகள் 10 மற்றும் ஏனைய வகைகளை சேர்ந்த துப்பாக்கி தொகை, துப்பாக்கி தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், மீள் நிரப்பக்கூடிய போரா 12 ரக துப்பாக்கி ரவைகள் 31, ரிவோல்டர் ரக ரவைகள் 5 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தனது வீட்டுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளார். ஸ்ரீலங்கா விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.