ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் விரைவில் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அனைக்கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆனையை பெற வேண்டும்.
பாலாற்றில் மணல் அளவு அள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் விவசாயம் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அந்த கழிவுநீரை ரூ.450 கோடி திட்டத்தின் மூலம் பைப்பு மூலம் கலக்க செய்ய வேண்டும். வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை மத்திய அரசு துவங்க வேண்டும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் நீரை எல்லா பகுதிகளுக்கும் விநியோகம் செய்ய வேண்டும்.
வேலூர் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துவதுடன் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு என்ற பெயரில் சுங்கச்சாவடிகளில் தனியார் உரிமையை தாரை வார்ப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூட வேண்டும் மேகி நூடுல்ஸ் அதிக ரசாயன பொருட்கள் கலந்திருப்பதால் அதன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தமாக தொண்டர்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மூன்றாவது முறையாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது கண்டிக்கதக்கது. ஐ.ஐடி மாணவர்கள் பிரச்சனைகளை நிர்வாகத்துடன் பேசி நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் பூரன மதுவிலக்கை அமுல்படுத்தகோரி வரும் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் தமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும். செம்மரக்கடத்தல் விவகாரத்தில் காவல்துறையினர் கடத்தல் மன்னர்கள் நெருக்கம் என்ன?
காவல்துறை எதற்காக அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதை விசாரணை நடத்தி சமூகவிரோதிகள் எந்த போர்வையிலிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு மேல்முறையீடு என்பது சட்டத்துகுட்பட்ட செயலாகும் என்று கூறினார்