2,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது

நிலக்கரி சுரங்க உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்தப்படி, 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

தமிழகத்தில், மின் தேவை உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை, மின் கொள்முதல் போன்ற நடவடிக்கைகளில், தமிழ்நாடு மின் வாரியம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்து பாரத் 500; மகாநதி 500; ஐ.எப்.எல்.எஸ்., 540; கோஸ்டல் எனர்ஜி 558; ஜிண்டால் 400; டி.பி.பவர் 208; பால்கோ 200; பாரிவேல் 100; அதுனிக் 100; ஜி.எம்.ஆர்., 150; ஒ.பி.ஜி., 74 ஆகிய தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,330 மெகாவாட் மின்சாரத்தை, 15 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய, மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.இதில், 2,158 மெகாவாட் மின்சாரம், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, வாங்கப்பட இருக்கிறது. தற்போது, ஒ.பி.ஜி., 74; ஜிண்டால், 150 என, 224 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது.’வரும், டிசம்பர் முதல், ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்து, 776 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட், என்.டி.பி.சி., செயில் உள்ளிட்ட, நான்கு நிறுவனங்கள் சுரங்கம் தவிர்த்து, நிலக்கரி சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்ட, 214 நிலக்கரி சுரங்க உரிமங்களை ரத்து செய்து, உத்தரவிட்டது.ரத்து செய்ததில், ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் உள்ளதால், அங்கு, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின் வாரியத்திற்கு, ஒப்பந்தப்படி, 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஒரு யூனிட் மின்சாரம், 4.91 ரூபாய் என்ற விலைக்கு வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள், லாப நோக்குடன் செயல்படுவதால், மின் உற்பத்தியை நிறுத்த வாய்ப்பில்லை. இதனால், நிலக்கரி உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், மாற்று ஏற்பாடு மூலம், மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

என்.டி.பி.சிஒடிசாகொள்முதல்சத்தீஸ்கர்சுப்ரீம் கோர்ட்சுரங்கம்தனியார்தமிழ்நாடுநிறுவனங்கள்நிலக்கரிமின் தடைமின்சாரம்ரத்து
Comments (0)
Add Comment