இரண்டாம் உலகப் போர், 2004ம் ஆண்டு சுனாமி ஏற்படும், 2001ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் 1989ம் ஆண்டே கணித்துக் கூறினார். அவர் கூறியது போன்றே இரண்டாம் உலகப் போர், சுனாமி, இரட்டைக் கோபுர தாக்குதல் ஆகியவை நடந்தன. 2018ம் ஆண்டு உலகின் சக்திவாய்ந்த நாடாக சீனா உருவெடுக்கும் என்று அவர் கணித்துள்ளார். மேலும் 2025ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகின் பசியை போக்கும் நடவடிக்கைகள் துவங்கும், 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்குள் உலகையே அழிக்கும் வகையில் அணு ஆயுத போர் நடக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். அவர் கணித்தவை அனைத்தும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக 2010ம் ஆண்டில் உலக தலைவர்கள் ஒபாமா, சார்கோசி, நேதன்யாஹு, புதின், கோர்டன் பிரவுன் ஆகியோரை கொல்ல முயற்சி நடக்கும் என்று அவர் கணித்தார். அந்த தலைவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.