ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர். ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாகக் காணப்படுகின்றன. அத்துடன், அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.