வடமாகாண பண்பாட்டலுவவல்கள் திணைக்களம் நடாத்தும் வடமாகாண பண்பாட்டு பெருவிழா இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்புற இடம்பெற்றுள்ளது
இந்த நிகழ்வு நேற்று (29) மற்றும் இன்று (30) ஆகிய இருதினங்களாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது
இந்த நிகழ்வின் இறுதி நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்களது பங்குபற்றுதலுடன் இன்று மாலை ஆரம்பமாகி இடம்பெற்றது
நிகழ்வில் வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா சிறப்பு மலரினை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கி வைக்க வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க சர்வேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்
அதனை தொடர்ந்து சிறந்த நூலாசிரியர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பதக்கம் அணிவித்து கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
அதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருதுகள் பெற்றவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பதக்கம் அணிவித்து கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2018 ம் ஆண்டின் முதலமைச்சர் விருதுக்கு சொந்தக்காரர்களாக நாடகத்துறைக்கு சுப்பிரமணியம் லோகநாதன் அவர்களும் இசைத்துறைக்கு கலாபூசணம் கந்தையா நடராசா அவர்களும் வாத்தியக்கலைக்கு கலாபூசணம் முருகேசு சடாச்சரம் அவர்களும் பரதநாட்டியத்துக்கு கலாபூசணம் பேரின்பநாயகி சிவகுரு அவர்களும் சிற்ப்பத்துறைக்கு கலாபூசணம் மரியநாயகம் அன்ரன் யோசவ் அவர்களும்,
கவிதை இலக்கியத்துறைக்கு கலாபூசணம் கந்தன் பாலன் அவர்களும் கூத்து துறைக்கு எலியாஸ் வரப்பிரகாசம் மற்றும் சரவணை விநாயகமூர்த்தி அவர்களும் ஒப்பனைக்கலை துறைக்கு கலாபூசணம் சின்னப்பெடியன் ஜயாத்துரை அவர்களும் கைவினைக்கலை துறைக்கு நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்களும் தமிழ் தொண்டு துறைக்கு வேலுப்பிள்ளை பரமநாதபிள்ளை அவர்களும் ஊடகத்துறைக்கு லோரன்ஸ் கொன்சால் வாஸ் குஞ்ஞ அவர்களும் ,
தொல்பொருட் சேகரிப்பும் பாதுகாப்பும் துறைக்கு கந்தப்பு நடராஜா சிறுகதை துறைக்கு ஜயாத்துரை சாந்தன் அவர்களும் நாவல் துறைக்கு கலாபூசணம் கார்த்திகேசு சச்சிதானந்தன் அவர்களுக்கும் இசைநாடக துறைக்கு கலாபூசணம் பரம்சோதி பரராசசிங்கம் அவர்களும் ஓவியத்துறைக்கு கலாபூசணம் சின்னத்துரை சண்முகராசா அவர்களும் கிராமியக்கலை துறைக்கு சின்னத்தம்பி நாகராஜா அவர்களும் இசைநாடக துறைக்கு சூசைப்பிள்ளை நோபேட் ஞானப்பிரகாசநாதன் அவர்களும் வாத்திய கலை துறைக்கு கலாபூசணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களுமே தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க சர்வேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஜி ரி லிங்கநாதன் மற்றும் வடமாகாண பிரதாம செயலாளர் பத்திநாதன் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிதிகளோடு கலை ஆர்வலர்கள் அரச அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகலென பலரும் கலந்துகொண்டுள்ளனர்.