2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ஐபோன் X வடிவமைப்பு வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐபோன் SE மாடல் 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
வழக்கமான ஐபோன் வடிவமைப்பு மற்றும் ஹோம் பட்டன்களை ஐபோன் SE 2 கொண்டிருக்கும் என கூப்படுகிறது. இத்துடன் 4.0 இன்ச் ஸ்கிரீன் மற்றும் ஆப்பிளின் புதிய A10 பிராசஸர் மற்றும் டச் ஐடி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் டூயல் கேமரா அம்சம் ஐபோன் SE 2 மாடலில் இடம்பெறாது என்றும் ஒற்றை பிரைமரி கேமரா மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் SE ஸ்மார்ட்போன் 32 ஜிபி மாடல் ரூ.21,859க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் SE 2 விலை 450 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,265 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2018-ம் ஆண்டில் மூன்று ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடலாம் என கூறப்பட்டது.
இத்துடன் புதிய ஐபோன்களில் அதிவேக இன்டெல் XMM 7560 மோடெம், குவால்காம் SDX 20 LTE cat மோடெம் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த சிப்செட்கள் 4×4 MIMO தொழில்நுட்பத்தில் இயங்கும், இது இந்த ஆண்டு ஐபோன்களில் வழங்கப்பட்டதை விட இருமடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.