30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட உறங்காத மனிதர்..

சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட உறங்காம அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் சவுதி அரேபியா ராணுவத்தில் அவர் பணிபுரிந்தவர் எனவும் கூறப்படுகின்றது

அவர் இராணுவத்தில் பணியாற்றும்போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பணி முடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற்றார். இருந்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே 4 நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று அவரை  பரிசோதித்தது.

இருந்தும் அவரால் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்க முடியவில்லையாம். தூங்குவதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதனால் ஆச்சரியம் அடைந்த டாக்டர்கள் குழு அதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர்.

சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவரின் மனஅழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இராணுவம். 30 ஆண்டுகள்உறக்கம்முதியவர்
Comments (0)
Add Comment