32 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: மோடிக்கு எடப்பாடி அவசர கடிதம்

32 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 53 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளை விடுவிக்க வலியுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையினர் இரு தினங்களில் பிடித்து சென்ற 32 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களும் சிறைபிடிக்கப்படுகின்றனர். பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ள பழனிசாமி, மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். மீனவர்கள் மீதான தாக்குதல் பெரும் கவலை தருகிறது. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் பெரும் கவலையை தருகிறது. தமிழக மீனவர்கள் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்க உள்ள நேரத்தில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும் தாக்கப்படுவுதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழக மீனவர்களின் பிரச்சனையில் இலங்கைக்கு போதிய நிர்பந்தம் அளிக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை தயவில் பாதுகாப்பின்றி விடப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறைஎடப்பாடி பழனிசாமிதமிழக மீனவர்கள்மோடி
Comments (0)
Add Comment