32 பேரின் ஜாமீன் மனுவை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 32 பேரின் ஜாமீன் மனுவை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தமிழர்கள் 32 பேரை ஆந்திர காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.

இவர்களுக்கு ஜாமீன் கோரி, தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்கள் திருப்பதி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி விஜயா, தமிழர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஆந்திராவின் புதிய வனச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கைதுசெம்மரம்தமிழர்கள்தள்ளுபடிதிருப்பதிநீதிமன்றம்மனுவெட்டுதல்
Comments (0)
Add Comment