42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதில் வேட்பாளர்கள் பலர் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல்  செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் தகவலில், 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 10 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக கருதி 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.  இதேபோன்று 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்கள் மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதில் வேட்பாளர்கள் பலர் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல்  செய்யவில்லை என்று கூறப்படுகிறது.   இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் தகவலில், 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 10 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக கருதி 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.  இதேபோன்று 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்கள் மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகாரிகணக்குசெலவுதடைதமிழகம்தாக்கல்தேர்தல்போட்டிராஜேஷ் லக்கானிவேட்பாளர்கள்
Comments (0)
Add Comment