42 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: படகுகள் மீட்கப்படவில்லை, மீனவர்கள் வருத்தம்

இலங்கைச் சிறையில் உள்ள 42 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த 31.5.2016 முதல் 15.7.2016 வரையான காலத்தில் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா தமது 31.5.2016, 4.6.2016, 6.6.2016, 9.6.2016, 16.6.2016, 25.6.2016, 3.7.2016, 5.7.2016, 7.7.2016 மற்றும் 16.7.2016 ஆகிய நாளிட்ட கடிதங்கள் மூலம் தமிழக மீனவர்கள் கைது பற்றிய விவரங்களை பிரதமரின் உடனடி நேரிடை கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். அக்கடிதங்களில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 77 அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைச் சிறைதமிழக மீனவர்கள்படகுகள்மீன்பிடிப்புவிடுதலை
Comments (0)
Add Comment