சந்திரனின் மேற்பரப்பில் இரும்புத்தாது உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதேபோன்று, பூமியிலும் சில பகுதிகளில் தாது வளம் காணப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, சந்திரன் பூமியில் இருந்து, வெடித்துச் சிதறிய ஒரு பகுதியாக, உருவாகியுள்ளதை உறுதி செய்துள்ளதாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபற்றி விரிவான ஆய்வுகள் நடத்திவருவதாகவும் கூறிய அவர்கள், பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் மட்டும் உறுதியான முடிவை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.