500 ஆவது நாளில் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாரிய போராட்டம் …

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) 500 ஆவது நாளை எட்டியுள்ளது

இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து இராணுவத்தின் கையில் ஒப்படைத்த தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தருமாறும் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை பத்துமணிக்கு ஆரம்பித்தனர்

இந்நிலையில் மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு மேலதிக பொலிசாரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

இன்று மாலை 2 மணிவரை போராட்டம் இடம்பெறவுள்ளதோடு தொடர் போராட்டத்தை இன்றுடன் நிறுத்தி மாதாந்தம் ஒருநாள் சர்வதேசத்தூடாக தமக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டப்போவதாக உறவுகள் அறிவித்துள்ளனர்

இன்றைய போராட்டத்தில் உறவுகளுடன் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்

உறவுகள்காணாமல் ஆக்கப்பட்டவர்கள்போராட்டம்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment