“போலியோ நோயற்ற நாடு” என்ற சான்றிதழை பெற்றுள்ளது இந்தியா

தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் “போலியோ நோயற்ற நாடு” என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரகத்தை சேர்ந்த 40000 குழுக்கள், முடக்குவாதம் குறித்த 60000 நோயாளிகளின் மாதிரிகளை போலியோ சோதனைக்கு உட்படுத்தியது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த 8 ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் 120000 மாதிரிகளில் போலியோ தாக்கியதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ள இந்தியா போலியோ அற்ற நாடு என்று பெயர் பெற்றுள்ளது பெருமை கொள்ளத்தக்க அம்சமாகும். மேலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா, பாட்னா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநகரங்களில் உள்ள கழிவு நீரை ஆய்வு செய்ததிலும் அதில் போலியோவை உருவாக்கும் வைரஸ் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக மத்திய அரசு விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாளை நடைபெற உள்ள இவ்விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரான சோனியா காந்தி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லாநாடுபோலியோ
Comments (0)
Add Comment