குறித்த சந்திப்பில் வடக்கு கிழக்பில் 21 லட்சம் ரூபா செலவில் அமைக்க எண்ணியுள்ள 65 ஆயிரம் வீடுகளும் எவ்வாறான வடிவில் அமைய வேண்டும் என்பதான இறுதி முடிவ்வினை மேற்கொண்டு அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பிக்கும் நோக்காக கொண்டே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
இத் திட்டத்திற்காக அமைக்கப்பட எண்ணியுள்ள வீட்டுத் திட்டத்தின் இரு மாதிரி வீடுகள் குடாநாட்டில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சாதக பாதக நிலைகளை அணைவரும் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கருத்தில் ஜனாதிபதி , பிரதமர் ரணில் விக்ரமசிங்கா , மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரனதுங்கா , உள்ளிட்ட பலரின் கருத்துமாக பொருத்து வீட்டிற்கான பாதி செலவில் அப் பிரதேச மக்கள் பெருதும் விரும்பும் வீட்டினை அமைக்க கூடிய நிலையில் உள்ள சமயம் அதிக செலவில் விருப்பமற்ற வீட்டினை தவிர்ப்பதே சிறந்தது . என்ற கருத்தே மேலோங்கியதுடன் இவ்வாறு அரை வாசியான பெறுமதியில் வீட்டினை அமைப்பதனால் வீட்டின் எண்ணிக்கைகளில் கூட அதிகரிப்பினை மேற்கொள்ள முடியும் . எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் விரைவில் அமைச்சரவைத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்பால் வடக்கு கிழக்கு பகுதிகளில் கல் வீடு அமைப்பதே உறுதியாகியது.
இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி , பிரதமர் , முன்னாள் ஜனாதிபதி , வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் ,மீள் குடியேற்ற அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் , மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.