டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து தனது மந்திரிசபையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்த கேஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து தனது மந்திரிசபையில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர், ராஜினாமா குறித்து ஜனாதிபதியின் முடிவு வரும் வரை மேலும் 5 நாட்கள் பதவியில் நீடிக்கும்படி டெல்லி மாநில அரசை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய கவர்னர், சட்டசபையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்துவதா? அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதா? என்பது குறித்து ஜனாதிபதியின் பதில் வந்ததும் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

கேஜ்ரிவால்
Comments (0)
Add Comment