80 நாட்கள் மட்டும் மீன் பிடிக்க அனுமதி கேட்கும் மீனவர்கள்!

வெறு­மனே அர­சியல் சுய­ந­லத்தை மாத்­திரம் கருத்தில் கொண்டு இந்­தி­ய-­ – இ­லங்கை அர­சாங்­கங்கள் இரு­நாட்டு மீன­வர்­க­ளையும் தூண்­டி­விடும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றன. எண்­பது நாட்கள் மாத்­திரம் இலங்கை கடல் எல்­லையில் மீன்­பி­டியை மேற்­கொள்ள எமக்கு அனு­ம­திக்க வேண்டும். அந்த கால எல்­லைக்கு அப்பால் ஒரு நாளேனும் எமது மீன­வர்கள் இலங்கை கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி மீன்­பி­டிக்க மாட்­டார்கள் என ராமேஸ்­வரம் மீனவர் சங்­கத்­த­லைவர் எமரிட் தெரி­வித்தார்.

இரு நாட்டு அர­சாங்­கங்­களும் மனது வைத்தால் நாம் நேர­டி­யாக இலங்கை அர­சாங்­கத்­தி­டமும், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­டனும் பேச்­ச­வார்த்தை நடத்தி தீர்­வு­காண தயா­ராக உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த திரு­விழா நேற்று விமர்­சை­யாக நடை­பெற்று முடிந்­தது. இந்த திரு­வி­ழாவில் கலந்­து­கொண்­டி­ருந்­த­போது இலங்கை இந்­திய மீன­வர்கள் பிரச்­சினை தொடர்பில்  ராமேஸ்­வரம் மீனவர் சங்­கத்­த­லைவர் எமரிட் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ்­நாடு மற்றும் இலங்கை மீன­வர்­களின் பிரச்­சி­னைக்­கான பேச்­சு­வா­ரத்தை என்­பது இன்று நேற்று அல்ல பல­கா­ல­மா­கவே நடத்­தப்­பட்டு வந்­துள்­ளது. ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் இந்த பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு ஒன்றை எட்­டக்­கூ­டிய நிலைமை இரு­த­ரப்­பினர் இடை­யிலும் ஏற்­ப­ட­வில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை மீனவர் சங்கத் தலை­வர்­க­ளுடன் தமிழ்­நாட்டில் முக்­கிய பேச்­சு­வார்த்தை நடத்தி பல இணக்­கப்­பா­டு­களை கண்டோம்.

குறிப்­பாக இலங்கை கடல் எல்­லையில் என்­பது நாட்கள் மாத்­திரம் இந்­திய மீன­வர்கள் மீன்­பி­டியில் ஈடு­பட அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என முக்­கிய கோரிக்­கையை முன்­வைத்தோம். அதேபோல் கடல்­வ­ளத்தை அழிக்­காது பாது­காப்­பது என பொது உடன்­பாட்டில் நாம் எப்­போதும் உள்ளோம்.

இரு­நா­டு­க­ளி­னதும் அர­சாங்­கங்­களும் மனது வைத்தால் இந்த மீனவர் பிரச்­சி­னையை ஒரே நாளில் தீர்த்து வைக்க முடியும். ஆனால் அர­சியல் சுய­ந­லத்தை மாத்­திரம் கருத்தில் கொண்டு இரு­நாட்டு மீன­வர்­க­ளையும் தூண்­டி­விடும் நட­வ­டிக்­கை­க­ளையே இரு அர­சாங்­கங்­களும் முன்­னெ­டுத்து வரு­கின்­றன என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

ஆகவே பிரச்­சி­னையை தீர்ப்­பது அர­சாங்­கத்தின் கைக­ளி­லேயே உள்­ளது. நாம் விட்­டுக்­கொ­டுக்க தயா­ராக உள்ளோம்.

நாம் வாக்­கு­றுதி வழங்­கி­ய­தைப்­போல என்­பது நாட்கள் மாத்­திரம் இலங்கை கடல் எல்­லையில் மீன்­பி­டியை மேற்­கொள்ள அனு­ம­திக்க வேண்டும். அந்த கால எல்­லைக்கு அப்பால் ஒரு நாளேனும் எமது மீன­வர்கள் இலங்கை கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி மீன்­பி­டிக்க மாட்­டார்கள் என்றார்.

தமிழ்­நாடு அனைத்து விசைப்­ப­ட­குகள் மீனவர் சங்க பொதுச்­செ­ய­லாளர் யேசு­ராஜா குறிப்­பி­டு­கையில்,

இந்­தி­யா­விடம் இருந்து 1974 ஆம் ஆண்டு கச்­ச­தீவை இலங்­கைக்கு ஒப்­ப­டைத்த பின்னர் இலங்கை இந்­திய மீன­வர்கள் மத்­தியில் எந்த குழப்­ப­நி­லையும் இல்­லாது சுமூ­க­மான வகையில் மீன்­பிடி நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. எனினும் 1983ஆம் ஆண்டு இனக்­க­ல­வரம் இலங்­கையில் இடம்­பெ­றற பின்­னரே இலங்கை மற்றும் இந்­திய நாடு­களின் மீன­வர்கள் மத்­தியில் குழப்­ப­நி­லை­மைகள் உரு­வா­கின. குறிப்­பாக தமி­ழக மீன­வர்கள் விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­வி­செய்யும் வகையில் செயற்­ப­டு­வ­தாக குறிப்­பிட்டு எமது தமி­ழக மீன­வர்­களை கைது­செய்யும் சூழ்­நிலை உரு­வா­னது.

எனினும் யுத்தம் முடி­வுக்கு வந்­த­போ­திலும் இந்த நிலை­மையில் பெரி­ய­ளவில் எந்த மாற்­றங்­க­ளையும் நாம் கவ­னிக்­க­வில்லை. இலங்கை கடற்­ப­டை­யி­னரின் ஆக்­கி­ர­மிப்பு தொடர்ந்த வண்­ணமே இருந்­தது. எனினும் கடந்த ஆண்டு இலங்­கையில் இடம்­பெற்ற ஆட்­சி­மாற்றம் இலங்கை இந்­திய மீன­வர்கள் பிரச்­சி­னைக்கு ஆரோக்­கி­ய­மான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் அமையும் என நாம் நம்­பினோம். ஆனால் இன்றும் பிரச்­சி­னைகள் முடி­வுக்கு வரு­வ­தாக தெரி­ய­வில்லை.

இந்த மீனவர் பிரச்­சி­னையில் இலங்கை அர­சாங்­கமும் இந்­திய அர­சாங்­கமும் தமது அர­சியல் சுய­ந­லத்தை மாத்­திரம் கவ­னத்தில் கொண்டு இரு நாட்டு மீன­வர்­க­ளையும் தூண்­டி­வி­டு­கின்­றன. இந்­திய அர­சாங்­கமும் இலங்கை அர­சாங்­கமும் இந்த விட­யத்தில் முக்­கிய கவனம் செலுத்த வேண்டும். கச்­ச­தீவு என்­பது இரு நாடு­க­ளுக்கும் பொது­வான எல்­லை­யாகும். இங்கு இலங்கை மீனவர்களின் ஆதிக்கம் மாத்திரம் மேலோங்கியிருப்பது கண்டிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

இப்போது நாம் தமிழ்நாடு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசாங்கம் தான் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நேரடியாக இலங்கை அரசாங்கத்திடமும், வடமாகாண முதலமைச்சருடனும் பேச்சவார்த்தை நடத்தி தீர்வுகான தயாராக உள்ளோம் என்றார்.

80 நாட்கள்அனுமதிகேட்கும்பிடிக்கமட்டும்மீனவர்கள்மீன்
Comments (0)
Add Comment