89 வயக்காட்டு பொம்மைகள் – முத்தையா பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளி

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் தமிழக சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 89 வயக்காட்டு பொம்மைகள் என்று முத்தையா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கோரினர். அது ஏற்றுக் கொள்ளப்படாததால், அமளி நீடித்தது.

திமுகவினரின் அமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

மின்சார கோரிக்கை மீதான பதிலுரை நாளை நடைபெறும் என்றும், திமுகவினர் அவை நடவடிக்கைகளை நடத்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அவைத் தலைவர் தனபால் குற்றச்சாட்டினார்.

அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒத்திவைப்புதமிழக சட்டப்பேரவைதிமுகமுத்தையாவயக்காட்டு பொம்மைகள்
Comments (0)
Add Comment