வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை மக்கள் பாவனைக்காக நேற்றைய தினம் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இராணுவமுகாம்
சாந்தைச் சந்தியிலிருந்து கிராமகோட்டுச் சந்திக்குச் செல்லும் வீதியில், இராணுவமுகாம் அமைந்திருந்தது.,
இந்நிலையில் தனியார் காணி ஊடாகவே மக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலமை அங்கு காணப்பட்டது.
தற்போது இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை விடுத்துள்ள நிலையில் . மக்கள் தனியார் காணி ஊடாகச் செல்லாமல், வீதி ஊடாக செல்லக் கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.