ஈரானின் அனைத்து இராணுவக் கட்டுமானங்களும் அழிப்பு

சிரியாவில் உள்ள ஈரானின் அனைத்து இராணுவக் கட்டுமானங்களையும் அழித்திருப்பதாக, இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் கோலன் பிராந்தியத்தை மீது , ஈரான் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகின்றது.

அதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் ஆயுதக்கிடங்கு

சிரிய எல்லையில் அமைந்திருந்த ஈரானின் ஆயுதக்கிடங்கினுள், மூலோபாய தளங்கள், புலனாய்வு மையம் எனபன தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரியாவில் உள்ள ஈரானியப் படைத்தரப்பு இன்னும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்ஈரானின் ஆயுதக்கிடங்குஈரானியப் படைத்தரப்புதாக்குதல்
Comments (0)
Add Comment