இந்தோனேஷியா தேவாலயங்கள் மீது குண்டு தாக்குதல்

இந்தோனேஷியா  சுரபாய நகரில்   உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் குண்டு தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்  தற்கொலை குண்டுதாரிகளினால்   நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் ஸ்தலத்திலேயே பலியானதோடு ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும்  தெரியவருகின்றது.

காயமடைந்தவர்களில பலரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மூன்று தாக்குதல்களும் ஒருசில நிமிட இடைவெளியில் இடம்பெற்றுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த  தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தோனேஷியாசுரபாயதற்கொலை குண்டுதாரிபொலிஸார்
Comments (0)
Add Comment