எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.