அமைச்சரது உறுதிமொழியுடன் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்தி எமது மீன்பிடி தொழிலை சுதந்திரமாக மேற்கொள நடவடிக்கை எடுக்க கோரிகடந்த 2 ம் திகதி முதல்  முல்லைத்தீவு  கடற்றொழில்  நீரியல் வள திணைக்களம் முன்பாக மீனவர்கள் நடாத்திய தொடர்போராட்டம் மத்திய அரசின் மீன்பிடி அமைச்சர் காமினி விஜித விஜயமுனி சொய்சா  அவர்களது உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது

இந்த விடயங்கள் தொடர்பில்  இன்றைய தினம் மத்திய அரசின் மீன்பிடி அமைச்சர் காமினி விஜித விஜயமுனி சொய்சா  தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் சாள்ஸ் நிர்மலநாதன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சி சிவமோகன் மாவை சேனாதிராசா  டக்ளஸ் தேவானந்தா,

மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வடமாகாண மீன்பிடி அமைச்சர் க சிவநேசன்  வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகானசபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களது கோரிக்கைகளை ஏற்றுமத்திய அரசின் மீன்பிடி அமைச்சர் காமினி விஜித விஜயமுனி சொய்சா அவர்கள் சட்டவிரோத தொழில்கள் உடனடியாக நிறுத்துவதாக உத்தரவாதமளித்தார் அதனைவிட இப்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாகவும்,

இது தொடர்பில் குழு ஒன்று ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுப்பதாகவும் அதுவரை அந்த அனுமதிகளையும் தடை செய்வதாக உறுதிமொழி வழங்கப்பட்டது

இந்நிலையில் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைத்த நிலையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

போராட்டம்மீனவர்கள்மீன்பிடி அமைச்சர்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment