அப்பிள் நிறுவனமானது விரைவில் தனது iPhone 6 இனை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் iPad Air 2 மற்றும் iPad Mini 3 எனும் இரு டேப்லட்களை இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளது.
இவற்றில் iPad Air 2 தொடர்பான புகைப்படங்களும், புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதன்படி அப்பிளின் இரண்டாம் தலைமுறைக்குரிய A8 64-bit Mobile Processor இனை கொண்டுள்ள இச்சாதனத்தில் 2GB RAM, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான FaceTimeHD கமெரா என்பனவும் காணப்படுகின்றன.