இந்தியாவால் மலையாக மக்களுக்கு 4000 வீடுகள்!

இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தின் கீழ் மலை­ய­கத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள 4 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான இரு­த­ரப்பு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் நேற்று கைச்சாத்­தி­டப்­பட்­டது. இத்­திட்டம் எதிர்­வரும் 24 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று வெள்ளிக்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்வில் இவ்­வொப்­பந்தம் கைச்சாத்­தி­டப்­பட்­டது. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் மற்றும் இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் வை.கே.சின்ஹா ஆகியோர் மேற்­கு­றித்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.

இந்­திய அர­சாங்­கத்தின் நிதி உத­வி­யுடன் அமைக்­கப்­ப­ட­வுள்ள மேற்­கு­றித்த 4 ஆயிரம் வீடு­களும் மத்­திய மற்றும் ஊவா மாகா­ணங்­களில் 2020 ஆம் ஆண்­டுக்கு முன் முழு­மை­யாக நிர்­மா­ணிப்­ப­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ், அமைச்சின் செய­லாளர் ரஞ்­சனி நட­ரா­ஜ­பிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர் மா.உதயகுமார், முன்னாள் எம்.பி.புத்திரசிகாமணி உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் பலர் கலந்­து­கொண்­டி­ருந் ­தனர்.

இங்கு அமைச்சர் திகாம்­பரம் உரை­யாற்­று­கையில், மலை­யகத்தில் புதிய வீடு­களை அமைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் 4 ஆயிரம் புதிய வீடு­களை இந்தியா அமைத்துத்தரவுள்ளது. மலை­யக மக்­களின் லயன் வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக தற்­போது முதற்­கட்­ட­மாக மலை­ய­கத்தின் பொக­வந்­த­லாவை மற்றும் அக்­க­ர­பத்­தனை ஆகிய பகு­தி­களில் வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 7 பேர்ச்சஸ் காணியில் தனி வீடு அமைக் கும் இந்த திட்டம் மலை­ய­கத்தின் ஏனைய பகு­தி­க­ளிலும் வெகு விரையில் முன்னெடுக்கப்படும்.

இந்திய அரசாங்கத்தினால் இந்த வீடுகள் இல­வ­ச­மாக அமைத்துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளன.­ மலை­யக தலை­வர்­க­ளுடன் இந்­திய அர­சாங்கம் ஒப்­பந்தம் செய்­து­கொள்ளும் முதல் சந்­தர்ப்­ப­மா­கவும் இது பதி­வா­கின்­றது என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், மலை­யக மக்கள் வீடற்­ற­வர்கள் என்ற அவப்­பெ­யரை நீக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகி­யோரின் வரு­கையின் பல­னாக இந்த திட்டம் மலை­யக மக்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது. எதிர்­வரும் 24 ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் ­ம­லைய மக்­க­ளையும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு நிக­ராக உயர்த்த எதிர்­பார்த்­துள்ளோம்.

இந்­நி­லையில் தற்­போது நாட­ளா­விய ரீதியில் நிர்­மா­ணிக்­கப்­படும் 50 ஆயிரம் வீடு­களில் 4 ஆயிரம் வீடுகள் மலை­யக மக்­க­ளுக்கு அமைத்­துக் ­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. எதிர்­கா­லத்தில் மேலும் புதிய வீடு­களை மலை­ய­கத்தில் நிர்­ம­ணித்­துக்­கொ­டுக்க எதிர்­பார்த்­துள்ளோம்.

மலை­யக மக்­களின் தொகை­யினை கருத்­திற்­கொள்ளும் போது மேலும் 20 ஆயிரம் புதிய வீடு­கள் தேவையாக உள்­ளது. இந்த கோரிக்­கை­யினை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யி­டத்தில் பகி­ரங்­க­மாக முன்­வைத்­துள்ளோம். எனவே இந்­திய அர­சாங்கம் மலை­யக மக்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்தி எமது கோரிக்­கைக்கு அமை­வாக மேலும் புதிய வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான உத­வி­களை வழங்­கு­மென எதிர்­பா­ர்த்­துள்ளோம் என்றார்.

இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் வை.கே.சின்ஹா கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்­கைக்கு இந்­திய அர­சாங்கம் வழங்கும் உதவித் திட்­டங்­களில் வீட்டுத் திட்­டமும் ஒன்றாகும். வடக்கு, கிழக்கில் 45 ஆயிரம் வீடு­களை அமைக்கும் பணி ஆர­ம்­பிக்­கப்பட்­டுள்­ளது. தற்­போது மலை­யகத்தின் வீட­மைப்புத் திட்­டமும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதேபோல் தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழும் பகுதிகளை மேம் படுத்த பல உதவித் திட்டங்களை இலங் கைக்கு வழங்கவுள்ளோம். அதன் படி மாத்தளையில் மகாத்மா காந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்டி தலதா மளிகை, புஸல்லாவ சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய இடங்களில் வீடமைப்பு, தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப மத்தியஸ்தானங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்தவும் முன்னெடுக்கவும் இவை உதவும். இந்தத் திட்டங்களுக்கு ஒத்து ழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத் திற்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

இந்தியாஇலங்கைகண்டிதலதா மாளிகைதொழில்நுட்பம்மக்கள்மலையகம்வீடுகள்
Comments (0)
Add Comment