இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது : பிரதமர் அறிவிப்பு

இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

இந்த நோட்டுக்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில்  ஏடிஎம் இயந்திரங்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்தால் மட்டுமே இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்க்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்.

1000 ரூபாய்500 ரூபாய்அடையாள அட்டைநோட்டுக்கள்பிரதமர் நரேந்திர மோடிமருத்துவமனைவங்கி
Comments (0)
Add Comment