மேலும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீரா, 65 நாட்கள் அல்ல. இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க 65 மணி நேரம்கூட அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று பதில் அளித்துள்ளது. இலங்கை மீனவர்கள் விஷயத்தில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ள வெளியுறவு அமைச்சகம், மீனவர் பிரச்சினையை தீர்க்கும் நேரத்தில் இலங்கை அமைச்சரின் கருத்து அதற்கு உதவிகரமாக இருக்காது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது.