புதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரபூர்வ இணையத்தள பக்கமொன்றில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் மோதல் தமது பிரச்சினை அல்ல என்றும், தமது முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை என்றும் , இனப் பிரச்சினைக்குத் தீர்வில்லையென்றால், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி சும்மா ஒரு பக்க வாத்தியம்தான் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலையில், புதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்ட்சித்த்கலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது என அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , அமைச்சரவையில் மிதவாத சிறுபான்மையினர் தலைவர்களுக்கான தனித்த ஆதரவுக் குரல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடமிருந்தே கிடைத்ததாகவும் ,தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த வேண்டும் என்றும்,
அவர்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கூறியதாக மனோ கணேசன் தமது அதிகாரபூர்வ இணையதளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.