எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன், மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், படையினர், பொலிஸார் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விசேட கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மாத்திரமே தாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது