ஐஐடி நிர்வாகத்துடன் மாணவர்கள் பேச்சுவார்த்தை நிறைவு

சென்னையில் ஐஐடி நிர்வாகத்துடன், அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

 அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள், ஐஐடி நிர்வாகத்துடன் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை குறித்து மாணவர் குழுவுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

 ஐஐடியில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்ட மாணவர் அமைப்பு, விதிகளை மீறியதாகக் கூறி ஐஐடி நிர்வாகம் அந்த அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் ஐஐடி வளாகத்தினுள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இன்று ஐஐடி நிர்வாகம் மாணவர் அமைப்பின் தடைக்குறித்து தனது தெளிவான நிலைபாட்டினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அங்கீகாரம் ரத்துஐஐடிதடைநிர்வாகம்பேச்சுவார்த்தைபோராட்டம்மாணவர் அமைப்புமாணவர்கள்
Comments (0)
Add Comment