ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா!

அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக ஜெயலலிதா இன்று காலை தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துவிட்டு, தமிழக முதல்வர்  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற அவர், ஆளுநர் ரோசய்யாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு வந்து  தன்னை முதல்வராக பதவியேற்க அனுமதிக்கும்படி, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளிக்கிறார். அதன்பின்பு நாளை முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார்.

அதிமுகஆளுநர் ரோசய்யாஓ.பன்னீர்செல்வம்ஜெயலலிதாதமிழக முதல்வர்ராஜினாமா
Comments (0)
Add Comment