தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்படிருந்தது.
அதோடு அறப்போர் இயக்கம் சார்பிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ,தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும்,
அதன் அறிக்கை வந்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் மீதான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.