கடலில் மூழ்கிய தமிழக மீனவர் மற்றும் படகை மீட்க இலங்கை அரசு அனுமதி

இலங்கை கடற்படையின் கப்பலில் படகு மோதியதால் கடலில் மூழ்கிய மீனவரைத் தேடிக் கண்டுபிடிக்க தமிழக அரசுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.

 கடந்த மாதம் 26ம் தேதி தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தமிழக மீனவர்கள் சென்ற படகு இலங்கைக் கடற்படையின் கப்பலில் மோதி மூழ்கியது. அதில் 4 மீனவர்கள் பயணித்தனர். அவர்களில் மூன்றுபேரை இலங்கைக் கடற்படையினர் மீட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 கடலில் மூழ்கிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் வில்வராஜ் என்பவரைக் காணவில்லை. அவரை மீட்டுத்தருமாறு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வில்வராஜைத் தேடிக் கண்டுபிடிக்க இலங்கை அரசு தமிழக அரசுக்கு அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை 2 விசைப்படகுகளில் 15 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் தலைமன்னார் செல்கின்றனர்.

அனுமதிஇலங்கை அரசுதனுஷ்கோடிதமிழக மீனவர்விசைப்படகுவேலைநிறுத்தப் போராட்டம்
Comments (0)
Add Comment