சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் கூறினார். இதேபோல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசிடம் இருந்து அறிக்கை வந்திருப்பதாகவும், அதன் மீது மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மேலும் லலித் மோடி – சுஷ்மா சுவராஜ் விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எதிர்க்கட்சியினர் ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.