குரங்கை போல் உருவத்தை மாற்றும் சிகா வைரஸ்!

சிகா(Zika) வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள சிகா  என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு இப்பெயர் வந்தது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரசும் பரவுகிறது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.
சாதாரண அறிகுறிகள் காய்ச்சல்
தோலில் அரிப்பு, கண் நோய், எலும்பு மூட்டுகளில் வலி, உடல் சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே இந்த நோய் பாதிப்புக்கும் தோன்றும். இந்த வைரசை கொண்டு செல்லும் ஏடிஸ் கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாள்களில் இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஜிக்கா வைரஸ்சுமந்து வரும் கொசுக்கள் கடித்த நான்கில் ஒருவருக்குதான் பாதிப்பு ஏற்படும்.
கர்ப்பிணிகளே உசார்
ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்யும். காலை, பிற்பகல் வேளைகளில் இந்த வகை கொசுக்கள் கடிக்கும். கர்ப்பிணிகளிடமிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு பெண் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தையானது மரபணு, நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
குரங்கு போன்ற தோற்றம்
இந்த வைரஸால் தாக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தையின் தலை சிறியதாக காணப்படுகிறது. குரங்கின் தோற்றத்தை போல குழந்தைகள் மாறிவிடுகின்றனவாம்.
லத்தின் அமெரிக்காவில் பாதிப்பு
லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், பார்படாஸ், பொலிவியா, கௌதமாலா, பியூர்டோரிக்கோ, பனாமா உள்பட 20 நாடுகளில் ஜிக்கா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்புகளால் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முதலில் சிகிச்சை
சிகா நோய் என்பது டெங்கு காய்ச்சலைப் போன்று அதிக வீரியம் மிக்கது அல்ல. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறத் தொடங்கினால் அதை எளிதாககக் குணமாக்கிவிடலாம். பிற வைரஸ் காய்ச்சலைப் போன்று இதுவும் சாதாரண வைரஸ் பாதிப்புதான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரத்த பரிசோதனை அவசியம்
ரத்தப் பரிசோதனையின் மூலம் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவற்றை எளிதில் கண்டறிய முடியும். நோய் உறுதி செய்யப்பட்டால் அவற்றை தற்போது புழக்கத்தில் இருக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொண்டே அவற்றை எளிதில் குணப்படுத்த முடியும்.
மருத்துவர் அறிவுரை
கொதித்து ஆற வைத்த நீரைப் பருக வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவம், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.
சுத்தம்
பாதுகாக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உடலையும், வசிக்கும் பகுதிகளையும் சுத்தமாகப் பராமரிப்பதன் மூலம் ஜிக்கா, டெங்கு உள்ளிட்ட அனைத்து வைரஸ் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
உருவத்தைகுரங்கைசிகாபோல்மாற்றும்வைரஸ்
Comments (0)
Add Comment