கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், யுவராஜை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இதன்படி 3 தனிப்படைகளை அமைத்து, திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் யுவராஜை தேடும் பணியில் சிபிசிஐடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் யுவராஜ் கைது செய்யப்படுவார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காதல் விவகாரத்தில் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், யுவராஜ் தலைமறைவாக இருந்து வருகிறார்.