சர்வதேசத்திடம் இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம்!

யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் சர்­வ­தேச கண்­கா­ணிப்பின் கீழ் அவர்­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யையே இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்கும். சர்­வ­ தேசம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் பொறி­மு­றை கள் அமைய வேண்­டிய தேவை உள்­ளது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

எனினும் எந்­த­வ­கை­யிலும் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டுகள் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­ப­டாது என்ற நிலைப்­பாட்டில் தாம் இருப்­ப­தா­க வும் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­ விக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதில் கூறு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்­தே­றி­யுள்­ளன என்ற குற்­ற­சாட்டை விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றிய நாம் தாயா­ராக உள்ளோம். எமது அர­சாங்கம் கடந்த காலத்தில் விட்ட தவ­று­களை விடாது. உண்­மை­களை கண்­ட­றி­வ­திலும் அதே சந்­தர்ப்­பத்தில் எமது இரா­ணுவம் மீதான கறையை நீக்­கு­வ­திலும் மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்கும் வகை­யிலும் செயற்­படும். அவ்­வா­றாக இருந்­தாலும் இந்த விசா­ர­ணைகள் முழு­மை­யாக உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்கு அமை­யவே நடை­பெறும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி ஆகியோர் இந்த விட­யத்தில் தெளி­வான நிலைப்­பாட்டில் உள்­ளனர். நாட்டை சர்­வ­தேச தரப்­பிடம் விற்­கவோ அல்­லது எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் வகையில் செயற்­ப­டவோ நாம் தயா­ராக இல்லை.

எனினும் இந்த விசா­ர­ணை­களின் மூல­மாக சர்­வ­தேச தரப்பை திருப்­திப்­ப­டுத்­த­வேண்­டிய தேவையும் உள்­ளது. அதேபோல் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பில் சர்­வ­தேச தரப்­பினர் இருந்த நிலையில் இருந்து இப்­போது மாறி­யுள்­ளனர். அதற்கு எமது சர்­வ­தேச ஒத்­து­ழைப்பும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தாக தெரி­வித்த வாக்­கு­று­தி­யுமே ஆகும்.

அதேபோல் இப்­போது இலங்­கையின் உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச கண்­கா­ணிப்­புகள் மற்றும் அவர்­களின் அனு­ப­வங்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வதில் நாம் தயா­ராக உள்ளோம். அத்­தோடு சர்­வ­தே­சத்தின் சட்ட உத­வி­களை பெறு­வ­தாயின் எவ்­வா­றான வகையில் அவற்றை கையாள்­வது என்­பது தொடர்­பிலும் நாம் ஆராய தயா­ரா­கவே உள்ளோம்.

ஆனாலும் இலங்­கையின் சட்ட வரை­புகள் இவ்­வா­றான உண்­மை­களை கண்­ட­றியும் செயற்­பாட்­டிற்கு பூர­ண­மாக போது­மா­ன­தாக அமையும் என்­பதே எமது நிலை­பா­டாகும். எமது நாட்­டிலும் நிபு­ணத்­துவம் வாய்ந்த அதேபோல் அனு­பவம் மிக்க சட்­ட­வ­றி­ஞர்கள் உள்­ளனர். அவர்­களை எம்மால் பயன்­ப­டுத்த முடியும். ஆகவே சர்­வ­தேச ஆலோ­ச­னை­க­ளுடன் அவர்­களின் கண்­கா­ணிப்­பி­லான உள்­ளக விசா­ர­ணையே நடை­பெறும். ஆனால் இது சர்­வ­தேச தலை­யீடு அல்ல. இரண்­டிற்கும் இடை­யி­லான வித்­தி­யா­சத்தை கவ­னத்­தில்­கொண்டு செயற்­பட வேண்டும்.

கேள்வி:- காணாமல் போனோர் தொடர்பில் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் காணாமல் போனோர் மிகவும் குறைந்த பட்ச எண்­ணிக்­கை­யென கூறு­கின்­றது. இது தொடர்பில் ?

பதில்:- காணமல் போனோர் எண்­ணிக்கை என்ன என்­பது தொடர்பில் எமக்கும் தெரி­யாது. ஆனால் அது எவ்­வ­ளவு தொகை­யாக இருந்­தாலும் கண்­ட­றி­யப்­பட வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். காணா­மல்­போனோர் தொடர்பில் கண்­ட­றிய நாம் சகல வித­மான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

கேள்வி :-வடக்கில் தொடர்ந்தும் இரா­ணுவ ஆட்சி நில­வு­வ­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வரு­கின்­றதே?

பதில்:- கடந்த காலத்தில் இலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு வந்­த­வுடன் வடக்கு இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் இருந்­தமை உண்­மை­யாகும். . அதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். அதேபோல் அப்­போ­தைய சூழ்­நி­லையை சர்­வ­தேச ஊட­கங்கள் கடு­மை­யாக விமர்­சித்­தன. அதே நிலைப்­பாட்டில் இப்­போதும் இருந்து செயற்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இப்­போது வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு இல்லை. இன்று வடக்கு மக்கள் ஜனநாயக ரீதியில் செயற்படக்கூடிய சூழலை எமது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்போதும் அதே பழைய கருத்துக்களை முன்வைப்பது உண்மைக்கு புறம்பான செயற்பாடாகும். எனினும் உண்மைகளை தெரிவிப்பதில் எமது ஊடகங்களுக்கு முக்கியமான கடமை உள்ளது. அதை சரியாக தெரிவித்தால் இவ்வாறான சிக்கல்கள் வரப்போவதில்லை என்றார்.

இராணுவத்தைகாட்டிக்கொடுக்கசர்வதேசத்திடம்மாட்டோம்
Comments (0)
Add Comment