சிறிலங்காவுக்குப் பயணம் நேற்று மேற்கொண்டுள்ள, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் அரூப் ராஹா, சீனன்குடாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமானப்படைத் தளபதியை, சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக வரவேற்றார்.
மூன்று நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும், இந்திய விமானப்படைத் தளபதி, சீனக்குடாவில் உள்ள விமானப்படையின் பயிற்சி நிலையம் மற்றும், திருகோணமலை விமானப்படைத்தளம், கட்டுநாயக்க விமானப்படைத்தளம் ஆகியவற்றுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.சீனக்குடாவில், சீன நிறுவனம் ஒன்றுக்கு, விமானப்பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இந்தநிலையிலேயே, இந்திய விமானப்படைத்தளபதி சீனக்குடாவுக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.