சிவகுமாரின் பரந்த மனசு.

நடிகர் சிவக்குமார் தான் வாழ்ந்து வந்த வீட்டை அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக தானமாக வழங்கியுள்ளார்

சென்னை தி.நகரில் தான் குடும்பத்துடன் வசித்து வந்த வீட்டையே சிவக்குமார் தானமாக வழங்கியுள்ளார். இந்த வீடு சிவக்குமார் சென்னைக்கு வந்த காலத்தில் சொந்தமாக வாங்கியதாம்.

இங்கு தான் சூர்யா, கார்த்தி, பிருந்தா ஆகியோர் பிறந்து வளர்ந்து. மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்ததும் இதே வீட்டில் தான்.

தற்போது இந்த வீட்டை, அகரம் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் அலுவலக பணிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார் சிவகுமார்.

அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற விருப்பத்தில், சூர்யா கட்டியுள்ள புதிய வீட்டில் சிவக்குமாரின் மொத்த குடும்பத்தினரும் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாசினிமாசிவகுமார்சூர்யாநடிகர்
Comments (0)
Add Comment