இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்துத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது
மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. அவர்கள் கல்லூரி நெறிமுறைகள் பின்பற்றப்படாததன் காரணமாகவே அந்த மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி தன்னாட்சி பெற்ற நிறுவனம். அந்த நிறுவனம்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மீது குறைகூற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், இந்த விஷயமோ, தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் தொடர்புடையது என்று ஸ்மிருதி இராணி விளக்களித்துள்ளார்.