ஜெயலலிதா மறைவு: அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட திமுக,காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சி கொடிகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு உயிரிழந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்தில் அதிமுக,திமுக,காங்கிரஸ்,மதிமுக உள்ளிட்ட கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

திருமானூர்,ஜயங்கொண்டம்,அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக,அதிமுக, காங்கிரஸ்,மதிமுக உள்ளிட்ட கட்சி கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

 

அதிமுககட்சி கொடிகள்காங்கிரஸ்ஜெயலலிதாதமிழக முதல்வர்திமுகமதிமுக
Comments (0)
Add Comment