இந்த வழக்கில் விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கினை முறையாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்திவருகிறது. சிபிஐ விசாரணை அவசியம் இல்லை என்றார். இதனை தொடர்ந்து இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.