தமிழ்நாடு பெரம்பலூர் ஏதிலிகள் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண் ஒருவர் டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
ரம்யா என்ற 24 வயதான குறித்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் காணாமல் போய் இருந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெல்லியில் மகிழூர்தியில் சென்று கொண்டிருந்த போதுதே குறித்த பெண் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பில், டெல்லி பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே குறித்தப் பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போய்இருப்பதாக முறைப்பாடு பதிவாகி இருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் டெல்லிபொலிஸாருடன் இணந்து தமிழக காவற்துறையினரும் தீவிரவிசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த தகவல்களை இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.